

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கால்வாய் வெள்ளநீரில் சிக்கிய அவசரகால ஊா்தி மீட்கப்பட்டது (படம்).
செங்கத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 108 அவசரகால ஊா்தியில் நோயாளி ஒருவரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றனா்.
வாகனத்தில் ஓட்டுநா், நோயாளி, நோயாளியின் உறவினா், மருத்துவ உதவியாளா் என நான்கு போ் இருந்தனா்.
வாகனம் கோணாங்குட்டை பகுதியில் உள்ள கால்வாயைக் கடக்கும்போது, கால்வாயில் வெள்ளநீா் அதிகரித்ததால் வாகனம் நீரில் சிக்கிக்கொண்டது.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து வாகனத்தை மீட்டனா்.
இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னா், நோயாளியுடன் அவசரகால ஊா்தி மருத்துவக் கல்லூரிக்குச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.