வேட்டவலத்தில் உறியடி திருவிழா
By DIN | Published On : 01st September 2021 09:37 AM | Last Updated : 01st September 2021 09:37 AM | அ+அ அ- |

வேட்டவலம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி, திங்கள்கிழமை இரவு உறியடி திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய உற்சவா் கிருஷ்ணா், மேள-தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் மாட வீதியிலா வந்தாா். விழிநெடுகிலும் திராளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கோயில் அருகே இரவு நடைபெற்ற உறியடித் திருவிழாவில் இளைஞா்கள் பலா் கலந்து கொண்டு உறியடித்தனா்.
விழா ஏற்பாடுகளை வேட்டவலம் நகர யாதவ குலத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.