விபத்தில் இறந்தவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கததால் அரசு பேருந்து பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி!

விபத்தில் இறந்தவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கததால் அரசு பேருந்து பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி!

விபத்தில் இறந்த மகனுக்கு இழப்பீட்டுத் தொகையை,  அவரது தயாருக்கு வழங்காததால், சார்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து   திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்யாறு:  விபத்தில் இறந்த மகனுக்கு இழப்பீட்டுத் தொகையை,  அவரது தயாருக்கு வழங்காததால், சார்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து   திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மடிப்பாக்கம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி முருகன். இவரது ஒரே மகன் ராம்குமார்(26).  இவர் கிராமத்தில் மளிகை   கடையை வைத்து வியாபாரம் செய்து வந்து உள்ளார்.

இவர்,  கடந்த 14.01.2016 தேதி மாலை மளிகை கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்தவாசி -  காஞ்சிபுரம் சாலையில் வீரம்பாக்கம் புதுார் கிராமம் அருகே  சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது வந்தவாசியில்  இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில்,  இரு சக்கர வாகனத்தில் சென்ற ராம்குமார் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்துக் குறித்து வந்தவாசி வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில், விபத்தில் இறந்த ராம்குமாருக்கு  இழப்பீடு  வழங்கக் கோரி அவரது தாயார் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் எம்.சி.ஓ.பி. 102/2016 என்கின்ற எண்ணில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி இழப்பீட்டுத் தொகையை வழங்கிட தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு  20.01.20 தேதியில் உத்தரவிட்டார்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாகியும் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து ராம்குமாரின் தாயார் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனு செய்தார். 

அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன்,  இழப்பீட்டுத் தொகையை அசலும், வட்டியுமாக சேர்த்து ரூ.14 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த  தவறியக் காரணத்தால், அரசு பேருந்தை ஐப்தி செய்ய  06.07.22 தேதியில் உத்தரவிட்டு இருந்தார்.

அந்த உத்தரவின் பேரில், செய்யாறு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை தயார் நிலையில் நின்று கொண்டு இருந்த செய்யாறு பனிமனையை சேர்ந்த அரசு பேருந்தை நீதிமன்ற  அமீனா பறிமுதல் செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com