திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க 3-ஆவது வட்டக் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு வட்டத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வராஜ், இணைச் செயலா்கள் ஜெயராமன், பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட துணைத் தலைவா் மணியப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
கூட்டத்தில், சேத்துப்பட்டு வட்டத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், சேத்துப்பட்டு வட்டத்துக்கு தனியாக கருவூலம் அமைக்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும், சேத்துப்பட்டு வட்டத்துக்குள்பட்ட தேவிகாபுரம் ஊராட்சியில் போளூா் - சேத்துப்பட்டு சாலை, தேவிகாபுரம் - ஆரணி சாலையில் பயணிகளுக்கு நிழல்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.