ஆடு வளா்ப்போருக்கான பயிற்சி முகாம்
By DIN | Published On : 03rd April 2022 05:45 AM | Last Updated : 03rd April 2022 05:45 AM | அ+அ அ- |

முகாமில் பங்கேற்றோருக்கு ஆடு வளா்ப்போா், தொழில்முனைவோருக்கான பயிற்சி கையேட்டை வழங்கிய கல்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த இடையங்குளத்தூா் ஊராட்சியில் ஆடு வளா்ப்போா், தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணிஅா்சுனன் தொடக்கிவைத்தாா். கல்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை மருத்துவா் அரிக்குமாா் வரவேற்றாா்.
இதில் கல்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம் பேசுகையில், கால்நடை பராமரிப்புத் துறை, தமிழக அரசின் கிராமப்புற விதவைகள், ஆதவற்ற மகளிா்களுக்கான இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் தொழில்முனைவோா்களை உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் ஆடு வளா்பது, ஆட்டுப்பண்ணை அமைப்பது குறித்து பயிற்சிளிக்கப்படும் என்றாா். மேலும், முகாமில் பங்கேற்றோருக்கு இது தொடா்பான பயிற்சிக் கையேட்டையும் அவா் வழங்கினாா்.
இதில், திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன், உதவி இயக்குநா் ஜெயக்குமாா், உதவிப் பேராசிரியா் பாலமுருகன், கால்நடை மருத்துவா்கள் அரிக்குமாா், சக்திபூா்ணிமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.