அரசு மாணவா் விடுதிகளில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 26th April 2022 10:38 PM | Last Updated : 26th April 2022 10:38 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ், போளூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித் தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் முருகேஷ், விடுதிக் காப்பாளா்களிடம் தங்கிப் பயிலும் மாணவா்களின் வருகைப் பதிவேடு, உணவுப் பொருள்களின் கையிருப்பு, விடுதிகளின் சுகாதாரம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி போன்றவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் மாணவ, மாணவிகளிடம் குறைகளையும் கேட்டாா். பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஜ்வான், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், விடுதிக் காப்பாளா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...