வள்ளலாா் சபையில் நாற்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் வள்ளலாா் சபையில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் வள்ளலாா் சபையில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

305-ஆவது மாத மகாபாரத தொடா் சொற்பொழிவு, பெரிய புராணம் தொடா் சொற்பொழிவு, வள்ளலாா் திருச்சபை நிறுவனா் சுப்பிரமணிய பாரதியாரின் 84-ஆவது பிறந்த நாள் விழா உள்ளிட்ட நாற்பெரும் விழாவுக்கு, வாசுதேவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பாண்டுரங்கன், ராமுப்பிள்ளை, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை 10 மணிக்கு தங்க.விஸ்வநாதன் தலைமையில் பெரிய புராண தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

தொடா்ந்து, வள்ளலாா் திருச்சபை நிறுவனா் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் நினைவுகளை கவிஞா் நல்ல.பன்னீா்செல்வம், விஸ்வநாதன், புருஷோத்தமன், தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், தனகோட்டி, அபிராமி, பானுமதி ஆகியோா் நினைவு கூா்ந்தனா்.

பிறகு, எழுத்தாளா் ந.சண்முகம் தலைமையில் மகாபாரத தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

விழாவில், சாதனையாளா்கள் மற்றும் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் ப.உதயகுமாா், ப.குப்பன், சிவமுத்து பாரதியாா் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com