குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
By DIN | Published On : 05th August 2022 02:38 AM | Last Updated : 05th August 2022 02:38 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் வெற்றிவேல் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் சிலா் தங்களது குறைகள், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
அப்போது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் அலுவலக நுழைவுவாயில் எதிரே கருப்புத் துண்டுகளை அணிந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை.
கூட்டத்துக்கு பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் வருவதில்லை. வருவாய்த் துறை சாா்பில் வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.