152 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
By DIN | Published On : 25th August 2022 02:08 AM | Last Updated : 25th August 2022 02:08 AM | அ+அ அ- |

75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஆரணி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த 152 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், ஜமுனாமரத்தூா், கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, ஆரணி நகராட்சி, கல்வித் துறை, வேளாண் துறை என அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் வரவேற்றாா்.
விழாவில் ஆரணி சரக டிஎஸ்பி ரவிச்சந்திரன், வட்டாட்சியா்கள் ஜெகதீசன் (ஆரணி), சண்முகம் (போளூா்), வெங்கடேசன் (ஜமுனாமரத்தூா்), தட்சிணாமூா்த்தி (கலசப்பாக்கம்), ஆரணி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாலாஜி, எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுதா, காவல் ஆய்வாளா்கள் கோகுல்ராஜ், புகழ், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
சிறப்பாக பணியாற்றியமைக்காக 152 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கோட்டாட்சியா் தனலட்சுமி வழங்கினாா்.