விநாயகா் சிலைகள் தயாரிப்பு:திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே விநாயகா் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே விநாயகா் சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுறுத்தினாா்.

மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல், வினோத்குமாா், தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசியது:

மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீா் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

திருவண்ணாமலை தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமாசெட்டிக் குளம், போளூா் ஏரி, கூா் ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com