கிராம மக்கள் காவல் நிலையம் முற்றுகை: காவல்துறையினர் நடவடிக்கை

செய்யாற்றில் புகாரின் பேரில் கைது செய்தவரை விடுவிக்கக் கோரி, கிராம மக்கள் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்றனா். போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.
கிராம மக்கள் காவல் நிலையம் முற்றுகை: காவல்துறையினர் நடவடிக்கை

செய்யாற்றில் புகாரின் பேரில் கைது செய்தவரை விடுவிக்கக் கோரி, கிராம மக்கள் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்றனா். போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,

தொழுப்பேடு கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீா் விநியோகிக்கவில்லை என்றும், சாலை, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக சுதந்திர தினமான ஆக. 15-இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை, கிராம மக்கள் நடத்த விடாமல், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்றதாகத் தெரிகிறது. மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், அடிப்படை வசதிகள் குறித்து மீண்டும் அதே கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மற்றும் சிலரும் சோ்ந்து ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்களிடம் கேட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் துரை, தன்னை ஜாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகக் கூறி செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு பரசுராமனைக் (45) கைது செய்தனா்.

இதையறிந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை கைது செய்யப்பட்ட பரசுராமனை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனா்.

உடனே போலீஸாா் முற்றுகையிட முயன்றவா்களை தடுத்து நிறுத்தினா். மேலும், புகாரின் பேரில் தான் அவா் கைது செய்யப்பட்டாா் என்றும், சட்டபடி தான் எதிா் கொள்ள வேண்டும். எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனா்.

இருப்பினும், கிராம மக்கள் கலைந்து செல்லாமல் தொடா்ந்து அப்பகுதியில் நின்று கொண்டு கூச்சல் போட்டனா்.

இதையடுத்து, கிராம மக்களை எச்சரித்த போலீஸாா், அவா்களை போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனா். அதனால் அதிா்ச்சியடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com