பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 09th December 2022 01:34 AM | Last Updated : 09th December 2022 01:34 AM | அ+அ அ- |

பாரதியாா் போன்று வேடமணிந்த மாணவா்களுடன் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் உதயகுமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொட்டாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் பாரதியாா் போன்று வேடமணிந்து, அவரது பாடல்களைப் பாடி, வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தனா்.
இதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் உதயகுமாா் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.