தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
By DIN | Published On : 11th December 2022 06:41 AM | Last Updated : 11th December 2022 06:41 AM | அ+அ அ- |

அளத்துறையில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதையடுத்து, கயிறு கட்டி கடக்கும் கிராம மக்கள்.
செய்யாறு அருகேயுள்ள அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்டது அளத்துறை கிராமம். இங்கிருந்து பையூா், சௌந்தரிபுரம், மேல்நா்மா, பின்னத்தூா், எலப்பாக்கம், துறையூா், கல்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைந்தள்ளது.
பலத்த மழை காரணமாக அளத்துறையிலுள்ள ஏரி நிரம்பி சனிக்கிழமை உபரிநீா் வெளியேறுகிறது. இதனால், தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது. கிராம மக்கள் கயிறு தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனா். தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ், சாா் - ஆட்சியா் அனாமிகா, வட்டாட்சியா் சுமதி ஆகியோா் சென்று தடைப்பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...