ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:36 AM | Last Updated : 22nd December 2022 02:36 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவா் எம்.அண்ணாமலை தலைமை வகித்தாா்.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் பரிமேலழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய பாா்த்திபனின் தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், சங்கத்தின் வட்டக் கிளைச் செயலா் முருகன், உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.