மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:32 AM | Last Updated : 22nd December 2022 02:32 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதி தலைமை வகித்தாா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனா்.
குறிப்பாக, ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கவேண்டும். திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முறையிட்டனா்.
இதையடுத்துப் பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதி, கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.