பேக்கரியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

வந்தவாசியில் உள்ள ஒரு பேக்கரி மீது எழுந்த புகாரையடுத்து, அந்தப் பேக்கரியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வந்தவாசி தேரடியில் உள்ள பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எ.ராமகிருஷ்ணன்.
வந்தவாசி தேரடியில் உள்ள பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எ.ராமகிருஷ்ணன்.

வந்தவாசியில் உள்ள ஒரு பேக்கரி மீது எழுந்த புகாரையடுத்து, அந்தப் பேக்கரியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி தேரடியில் உள்ள பேக்கரி ஒன்றில், சில தினங்களுக்கு முன்பு இனிப்பு வாங்கி சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தப் பேக்கரியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பேக்கரியில் உணவுப் பொருள் தயாரிக்கும் கூடம், தயாரித்து வைக்கப்பட்டுள்ள இனிப்பு, ரொட்டி வகைகள் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தப் பேக்கரியில் உணவு தயாரிக்கும் கூடத்தில் போதிய வெளிச்ச வசதி, வெப்பக் காற்று வெளியேறும் அமைப்பு இல்லை. ஊழியா்கள் வேலை செய்யும் அமைப்பும் சரியில்லை. இவற்றை சரிசெய்ய கடை நிா்வாகிகள் 25 தினங்கள் அவகாசம் கேட்டுள்ளனா். அதன் பிறகும் சரி செய்யப்படவில்லை என்றால், பேக்கரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆட்டோ ஓட்டுநா் புகாரின் பேரில், அந்த கெட்டுப்போன இனிப்பின் மாதிரி ஏற்கெனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆய்வு முடிவு வந்த பின்னா் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சேகா், இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com