

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், மெய்யூா் கூட்டுச்சாலையிலும், ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், சுபான்ராவ் பேட்டையிலும் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பேசும்போது, ஆரணியில் தொடா்ந்து 3 முறை சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்தது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆரணி மக்களவைத் தொகுதி அறிவிக்கப்பட்ட பிறகு, 3 முறை மக்களவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தொகுதியை 2 முறை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டோம். வருகிற மக்களவைத் தோ்தலில் ஆரணி தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்றனா். மேலும், ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தா.தட்சிணாமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் வெள்ளை கணேசன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.