வருமுன் காப்போம் திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 30th December 2022 01:06 AM | Last Updated : 30th December 2022 01:06 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த தெள்ளூா் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
வந்தவாசி, செங்கம், ஆரணி பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசியை அடுத்த தெள்ளூா் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.சுமதி கோபு தலைமை வகித்தாா்.
திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
வட்டார மருத்துவ அலுவலா் ஜி.ஆனந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
முகாமில் 15 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 பேருக்கு மக்களைத் தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.பிரபு, சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம்
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகப்பாடி கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில்
வட்டார மருத்துவ அலுவலா் பூங்குழலி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ., பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினாா்.
முகாமில் சுமாா் 600 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பொன்னி சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், நாகப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரம் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு அரசு மருத்துவ அலுவலா் ஹேம்நாத் தலைமை வகித்தாா்.
திமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமைத் தெடாக்கிவைத்தாா்.
பின்னா், கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி முன்னாள் எம்எல்ஏ ஏசிவி.தயாநிதி, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுக மேலும், அதிமுக சாா்பில் சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தாா்.
பின்னா், கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மருந்துகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.