பறிமுதல் செய்யப்பட்ட 6,059 மதுப் புட்டிகள் அழிப்பு
By DIN | Published On : 27th February 2022 04:53 AM | Last Updated : 27th February 2022 04:53 AM | அ+அ அ- |

கரைப்பூண்டி ஆற்றுப் பாலத்தில் இயந்திரம் மூலம் அழிக்கப்படும் மதுப் புட்டிகள்.
போளூா், திருவண்ணாமலை வட்டங்களில் கலால் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 6,059 மதுப் புட்டிகள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
திருவண்ணாமலை, போளூா் வட்டங்களில் கலால் துறையினா் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, 2008 - 2021ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட, திருவண்ணாமலை வட்டத்தில்
2,586 மதுப் புட்டிகளும், போளூா் வட்டத்தில் 3,473 மதுப் புட்டிகளும் அந்தந்த காவல் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 6,059 மதுப் புட்டிகள் போளூரை அடுத்த கரைப்பூண்டி ஆற்றுப் பாலத்தில் வைத்து கலால் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் இயந்திரம் மூலம் அழித்தனா். கோட்ட கலால் அலுவலா் வைதேகி, காவல் ஆய்வாளா்கள் புனிதா (போளூா் ), நிா்மலா (திருவண்ணாமலை) மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.