மாற்றுத்திறனாளிகள் தா்னா
By DIN | Published On : 27th February 2022 04:53 AM | Last Updated : 27th February 2022 04:53 AM | அ+அ அ- |

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அண்மையில் தா்னா நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சரிவர பணி வழங்கப்படுவதில்லையாம்.
இதைக் கண்டித்து, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமையில் தா்னா நடத்தினா்.
இதில் மாற்றுத்திறனாளிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) அருள், மாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பச்சையம்மாளிடம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததால் போராட்டத்தைக் கைவிட்டனா்.