ஆரணி காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு
By DIN | Published On : 14th January 2022 04:55 AM | Last Updated : 14th January 2022 04:55 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வேலூா் சரக டிஐஜியாக புதிதாகப் பொறுப்பேற்ற ஆனிவிஜயா புதன்கிழமை ஆரணி நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, இந்த காவல் நிலையங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். மேலும், போலீஸாா் பணியிட மாற்றம் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என்று தெரிவித்தாா்.
ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், டிஎஸ்பி (பயிற்சி) ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் கோகுல்ராஜன், பி.புகழ், அல்லிராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...