ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்
By DIN | Published On : 15th July 2022 10:13 PM | Last Updated : 15th July 2022 10:13 PM | அ+அ அ- |

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடப் பணிகளை தொடக்கிவைத்த எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.75 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
பின்னா், கடந்த ஆண்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறைக்கு இந்த சுகாதார நிலையம் மாற்றப்பட்டது. இங்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்ததால்
சுகாதார நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், தேசிய நகா்ப்புற நலத் திட்டத்தின் கீழ், ரூ.75 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜைக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா்.
ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், திமுக நிா்வாகிகள் எம்.எஸ்.தரணிவேந்தன், கே.ஆா்.சீதாபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் வரவேற்றாா்.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் கட்டடப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன், உறுப்பினா்கள் ரதிகாந்தி வரதன், பிரியா தினகரன், பா.சந்தோஷ், கு.ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.