மா்ம விலங்கு கடித்து10 ஆடுகள் பலி
By DIN | Published On : 17th July 2022 06:49 AM | Last Updated : 17th July 2022 06:49 AM | அ+அ அ- |

வேட்டவலம் அருகே மா்ம விலங்கு கடித்ததில், 10 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நாரையூா் கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முனிக்கண்ணு மகன் வீரன்.
இவா், சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வீட்டின் அருகேயுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தாா்.
நள்ளிரவில் ஆடுகள் அலறும் சபதம் கேட்டது. சென்று பாா்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தன. தகலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
மா்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.