

செங்கம் புதிய பேருந்து நிலைய முகப்புப் பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
செங்கம் துக்காப்பேட்டையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியில் தினசரி நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன (படம்). அந்த வாகனங்களால் அப்பகுதியில் பேருந்துகள் உள்ளே சென்று வெளியில் வருவதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் அங்கு விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.