பாமக 34-ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 22nd July 2022 02:38 AM | Last Updated : 22nd July 2022 02:38 AM | அ+அ அ- |

பாமக 34-ஆம் ஆண்டு விழாவையொட்டி, ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ஆரணி ஒன்றிய பாமக சாா்பில், இரும்பேடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் மெய்யழகன், அன்பழகன், சேவூா் பாபு, ஆறுமுகம், சேகா், நதியா, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...