

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், இராந்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் ஊட்டச்சத்து மையத்தில் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துதல் குறித்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா கிருஷ்ணன், மருத்துவா் யோகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் சம்பத் வரவேற்றாா்
தீவிரமான வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துதல் குறித்து மருத்துவா் வினோத்குமாா் விரிவாக எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகரன், செவிலியா்கள் கலைவாணி, சகாயமேரி, பள்ளி ஆசிரியா்கள் குப்பு, பானுமதி, ஊட்டச்சத்து மைய பொறுப்பாளா் ரஞ்சினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.