பையூா் பொன்னியம்மன் கோயில் தேரோடும் வீதிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த பையூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் ஆக. 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளதால், தேரோடும் வீதிகளில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பொன்னியம்மன் கோயில் தேரோடும் வீதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

பையூா் பொன்னியம்மன் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக.9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்காக, பொதுமக்கள், ஊா் தலைவா்கள், இளைஞா்கள், விழாக் குழுவினா் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 25 அடி உயரத்தில் புதிய தோ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட்டாட்சியா் பெருமாள் தலைமையில், மின் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் புதிய தேரை பாா்வையிட்டனா். பின்னா் தேரோடும் வீதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com