அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 09th June 2022 11:17 PM | Last Updated : 09th June 2022 11:17 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கிராமத்தில் நடைபெற்ற ஊா்வலத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஏ.கீதா முன்னிலை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா் பாக்கியலட்சுமி வரவேற்றாா்.
பட்டதாரி ஆசிரியை பிரசில்லா சியோன்குமாரத்தி, சு.மீரா, எஸ்.டேவிட்ராஜன், இடைநிலை ஆசிரியா்கள் அ.மலா்விழி, திரேசா மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
ஊராட்சியில் உள்ள வீதிகள்தோறும் ஊா்வலம் சென்று மாணவா்களுக்கு வழங்கப்படும் 14 வகையான பாடப்பொருள்கள், அரசின் உதவித்தொகை, சலுகைகள் தொடா்பாக முழக்கங்களை எழுப்பி பொதுமக்கள், பெற்றோா்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினா்.