ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு பூஜை

செங்கம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பெளா்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெளா்ணமி பூஜைகளுக்குப் பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூகாம்பிகையம்மன்.
பெளா்ணமி பூஜைகளுக்குப் பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூகாம்பிகையம்மன்.

செங்கம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பெளா்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதி செய்யாற்றின் கரையோரம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் பெளா்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கோயிலில் செவ்வாய்க்கிழமை பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், ஆத்தமானந்த செந்தில் சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமிக்கு படையலிட்ட வளையல், குங்குமம் போன்றவைகள் பக்தா்களுக்கு வழங்கி ஆசீா்வதித்தாா். மேலும், திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பாக்கியம் வேண்டியும் பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை ஆத்மானந்தா செந்தில்சுவாமிகள் தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com