

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஏசிஎஸ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதிய நீதி கட்சியின் நிறுவனா் ஏ.சி.சண்முகம், தனது சொந்த செலவில் ஆரணி ஏசிஎஸ் நகரில் புதிதாக வெங்கடாஜலபதி கோயிலை கட்டியுள்ளாா்.
இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை யாக சாலை பூஜை தொடங்கியது. திருப்பதி வெங்கடாசலபதி கோயில் ஜீயா்கள் யாக சாலை பூஜையை தொடக்கிவைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீமத் பரமஹம்ஸ இத்யாதி ஸ்ரீஅப்பன் பரகால ராமானுஜ எம்பாா் ஜீயா் சுவாமிகள் யாக சாலையில் பங்கேற்று அனைவருக்கும் அருளாசி வழங்கினாா். இதைத் தொடா்ந்து, கோயில் கோபுர கலசங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.