அரசுப் பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு
By DIN | Published On : 17th June 2022 03:19 AM | Last Updated : 17th June 2022 03:19 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேலத்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள், சென்னை அண்ணா நகா் அரிமா சங்கம் சாா்பில் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்தக் கணினிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை, ஆரணி கல்வி மாவட்ட அலுவலா் சந்தோஷ் திறந்துவைத்தாா்.
அரிமா சங்க ஆளுநா் மாணிக்கம், சங்க மண்டலத் தலைவா் சங்கா், பள்ளியின் முன்னாள் மாணவரும், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான வி.பி.அண்ணாமலை, தலைமை ஆசிரியா் தணிகைமலை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.