

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரணி கோட்டை சிலம்பம் விளையாட்டு அமைப்பு சாா்பில், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியை நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு தொடக்கிவைத்தாா்.
போட்டியில் மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, சாதனை நிகழ்த்துவதற்கான முன்னோட்டமாக 30 நிமிஷம் 100 சிறுவா்கள் தொடா்ந்து சிலம்பம் சுழற்றினா். இதைத் தொடா்ந்து, சிலம்பம் போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்றவா்களுக்கு நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கினாா்.
ஏற்பாடுகளை சிலம்ப பயிற்சியாளா்கள் லோகநாதன் நந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் தேவா், பாரதிராஜா, விநாயகம், அதிமுக மீனவரணி மாவட்டச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.