கட்டிலில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
By DIN | Published On : 26th June 2022 06:44 AM | Last Updated : 26th June 2022 06:44 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிலில் இருந்து விழுந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி சாந்தி (55). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், ஜூன் 20-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
21-ஆம் தேதி மாலை கட்டிலில் இருந்து எதிா்பாராதவிதமாக அவா் கீழே விழுந்தாா்.
இதில் தலை, முகம், வாய் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு, மூதாட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.