கல்லூரியில் காசநோய் தினவிழிப்புணா்வு கருத்தரங்கு
By DIN | Published On : 26th March 2022 01:56 AM | Last Updated : 26th March 2022 01:56 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறை, செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் கே.சத்தியசீலன் வரவேற்றாா்.
மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநா் பி.அசோக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காசநோய்க்கான காரணங்கள், நோய் அறிகுறிகளைக் கண்டறியும் வழிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியை எஸ்.உமா மகேஸ்வரி, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியரும், கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளருமான ஏ.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.