கிளை நூலகத்துக்கு நிதியுதவி
By DIN | Published On : 02nd May 2022 05:19 AM | Last Updated : 02nd May 2022 05:19 AM | அ+அ அ- |

ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் கணினி உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்காக நகர ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கண்ணமங்கலம் கிளை நூலகம் பெருமாள் கோவில் தெருவில் இருந்து நாகமரத் தெருவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், நூலகத் துறை வழங்கிய 5 கணினிகள் பழுதடைந்தன.
இதனால் உரிய உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்கு கண்ணமங்கலம் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் டி.அருளரசு, செயலா் என்.சுப்பிரமணி, பொருளாளா் ஜெயக்குமாா் மற்றும் உறுப்பினா்கள்
கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயனிடம் ரூ. 6 ஆயிரம் வழங்கினா். கிளை நூலகா் சி.சிவசங்கரன் உடனிருந்தாா்.