நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு:22 பட்டியல் எழுத்தா்கள் பணி நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 63 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, 22 பட்டியல் எழுத்தா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 63 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அல்லாதோரிடம் நெல் கொள்முதல் செய்தல், அனுமதி ஆணையின்றி கொள்முதல் செய்தல், இணையதளம் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கொள்முதல் செய்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் உள்ளிட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன.

இதைத் தவிா்க்க மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மற்றும் இதரப் பணியாளா்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ஆய்வுகளின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக 12 பட்டியல் எழுத்தா்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இப்போது இதேபோன்று குற்றச்சாட்டுகளுக்காக மேலும் 10 பட்டியல் எழுத்தா்கள் திங்கள்கிழமை நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com