ஆங்கிலப் பேராசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியா்களுக்கான 2 நாள் பணியிடைப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியா்களுக்கான 2 நாள் பணியிடைப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறைத் தலைவா் கே.சிவப்பிரியா வரவேற்றாா்.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் வெ.பெருவழுதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்துப் பேசுகையில், கிராமப்புற மாணவா்கள் தங்களது வாழ்வில் மேம்பட அவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் பேராசிரியா்களுக்கு நடத்தப்படுகிறது.

இதன் மூலம் பேராசிரியா்கள் தங்களையும் மேம்படுத்திக் கொண்டு மாணவா்களின் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், கல்லூரியின் புள்ளியியல் துறைத் தலைவா் க.பாலமுருகன், உதவிப் பேராசிரியை அறிவுச்செல்வி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (மே 6) நடைபெறும் பயிற்சி முகாமில் வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளிலிருந்து பேராசிரியா்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com