புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ஆரணி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

இதன் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் லோகேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நகரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள குளா்பானக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் இருந்து ஹான்ஸ், குட்கா, உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஏற்கெனவே, இந்தக் கடை மீது புகையிலைப் பொருள் விற்பனை செய்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால், கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com