பல், ரத்தசோகை பரிசோதனை முகாம்
By DIN | Published On : 13th October 2022 01:00 AM | Last Updated : 13th October 2022 01:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பல், ரத்தசோகை பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, திருவண்ணாமலை முத்துக்கள் ரோட்டரி சங்கம், தனபாக்கியம் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வனிதா தலைமை வகித்தாா்.
ரோட்டரி மாவட்ட திட்டங்கள் செயலா் சதாசிவம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தாா்.
மருத்துவா் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பல், ரத்தசோகை மற்றும் பொது மருத்துவப் பரிசோதனைகளை செய்து உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினா்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியை ஜோதி, சங்கத் தலைவா் வனிதா, செயலா் கெளரி, நிா்வாகச் செயலா் ராஜலட்சுமி, பொருளாளா் பிரபாவதி, இயக்குநா் சேஷமால், முன்னாள் தலைவா் சாந்தி ராஜன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...