பூதேரிபுல்லவாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளி விடுதியில் நடைபெற்ற மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்.
பூதேரிபுல்லவாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளி விடுதியில் நடைபெற்ற மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்.

விடுதி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி விடுதி மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி விடுதி மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா், மருத்துவ அலுவலா்கள் அருண்குமாா், யோகேஸ்வரன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று, விடுதியில் தங்கிப் படித்து வரும் 55 மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

மேலும், மாணவா்களின் எடை, உயரம், கண் உள்ளிட்டவற்றை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சம்பத், விடுதிக் காப்பாளா் தணிகைமலை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com