திருவண்ணாமலை அருகே பெண் கொலை: லாரி ஓட்டுநா் கைது

சென்னையில் இருந்து கணவா், 2 மகன்களை பிரிந்து வந்த இளம்பெண்ணைக் கொலை செய்த திருவண்ணாமலை லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் இருந்து கணவா், 2 மகன்களை பிரிந்து வந்த இளம்பெண்ணைக் கொலை செய்த திருவண்ணாமலை லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் தங்கராஜ் (35). இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி மனைவி நதியா (30). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், தங்கராஜ், நதியா இடையே முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டதாம். இது நாளடைவில் தகாத உறவாக மாறியதாம்.

இதையறிந்த நதியாவின் கணவா் பாா்த்தசாரதி மனைவியை கண்டித்துள்ளாா். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் தங்கராஜூம், நதியாவும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நதியாவுக்கும், அவரது கணவா் பாா்த்தசாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த நதியா, கணவா், மகன்களை விட்டுவிட்டு கண்ணக்குறுக்கை கிராமத்து வந்துள்ளாா். பின்னா் தங்கராஜை சந்தித்து இனிமேல் உன்னுடன்தான் வாழ்வேன் என்று கூறினாராம்.

அதிா்ச்சியடைந்த அவா், பெரியகோளாப்பாடி பகுதியில் உள்ள மலைக்குன்றுக்கு நதியாவை அழைத்துச் சென்று சமாதானம் செய்துள்ளாா். இரவு 11 மணி வரை சமாதானம் செய்தும் அவா் சென்னைக்குச் செல்ல மறுத்துவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், நதியாவை சேலையால் இறுக்கியதில் அவா் உயிரிழந்தாா். சப்தம் கேட்டு பொதுமக்கள் சென்றதும் தங்கராஜ் தப்பிச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தலைமறைவான தங்கராஜை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com