அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
By DIN | Published On : 19th October 2022 02:54 AM | Last Updated : 19th October 2022 02:54 AM | அ+அ அ- |

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கலைப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.
வேதியியல் துறைத் தலைவா் சித.ரவிச்சந்திரன், தமிழ்த் துறைத் தலைவா் கு. கண்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். செய்யாறு டிஎஸ்பி வி.வெங்கடேசன், காவல் உதவி ஆய்வாளா் எம்.சங்கா் ஆகியோா் மாணவா்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள், பேருந்தில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், கைப்பேசியால் ஏற்படும் தீமைகள், பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள், கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து குறிப்பிட்டு பயிற்சி அளித்தனா்.
நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கெளரவ விரிவரையாளா்கள் கலந்து கொண்டனா்.