வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 19th October 2022 02:59 AM | Last Updated : 19th October 2022 02:59 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் பலியானாா்.
செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன். இவரது மகன் ஷாகீா் (21). இவா், செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், வெம்பாக்கம் வட்டம் செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் உள்ள தனது பாட்டியை பாா்ப்பதற்காக ஷாகீா் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா்.
செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் தும்பை கிராமம் பேருந்து நிறுத்தம் வளைவுப் பகுதியில் சென்ற போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஷாகீா் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் ஷங்கா் செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று
ஷாகீரின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்காண்டு வருகிறாா்.