அரசு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த காஞ்சி ஊராட்சியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.
அரசு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த காஞ்சி ஊராட்சியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

காஞ்சி ஊராட்சியில் சுண்ணாம்புக் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனா். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நீா்நிலை புறம்போக்கில் வசித்து வந்தவா்களின் வீடுகள் அகற்றப்பட்டன.

இதனால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 6 பேருக்கு காஞ்சி ஊராட்சி பெருமாள் கோவில் செல்லும் சாலையில் மாற்று இடமாக அரசு புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியா் முனுசாமி தோ்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த இடத்தில் 6 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி கோபால், துணைத் தலைவா் ஜெயக்குமாா், வருவாய் ஆய்வாளா் சரண்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் அப்பாசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com