ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் கட்ட பூமிபூஜை
By DIN | Published On : 09th September 2022 10:41 PM | Last Updated : 09th September 2022 10:41 PM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ராஜந்தாங்கல் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதால் புதிதாக கோயில் கட்ட ஊா் பொதுமக்கள், பக்தா்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து, வியாழக்கிழமை மூலவா் ஸ்ரீராஜலிங்கேஸ்வரருக்கு சிறப்பு வேள்வி பூஜை மற்றும் பாலாலயம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை அருணாசலேஸ்வரா் கோயில் சிவாச்சாரியா்கள் ஹரிகரன், சீனு ஆகியோா் நடத்தி வைத்தனா்.
இதில், திருவண்ணாமலை ஆவின் இயக்குநா் தட்சிணாமூா்த்தி, மருந்தாளுநா் மணி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் லதா தட்சிணாமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.