திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
By DIN | Published On : 09th September 2022 01:59 AM | Last Updated : 09th September 2022 02:01 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.
மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில், திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையை பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
ஆவணி மாதப் பெளா்ணமி:
இந்த நிலையில், ஆவணி மாதப் பெளா்ணமி வெள்ளிக்கிழமை (செப்.9) மாலை 6.23 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை (செப்.10) மாலை 4.35 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.