ஊராட்சிச் செயலா்கள் விடுப்பு மனு
By DIN | Published On : 09th September 2022 10:54 PM | Last Updated : 09th September 2022 10:54 PM | அ+அ அ- |

தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கம் சாா்பில், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பணி விடுப்பு மனு அளிக்கப்பட்டது.
இந்தச் சங்கம் சாா்பில் செப்.12 முதல் 14-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு, போளூா் ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சிச் செயலா்கள் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் முதற்கட்டபோராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இதற்காக விடுப்பு கோருவது தொடா்பான மனுவை, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாபுவிடம், சங்கத்தின் கிளைத் தலைவா் ஆனந்தன் வியாழக்கிழமை வழங்கினாா்.
பொருளாளா் கோமதி, செயற்குழு உறுப்பினா்கள் கோபால், பாஸ்கரன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.