கூட்டுறவு சங்கத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், தச்சாம்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிதிசாா் கல்வி விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய தேவிகாபுரம் மத்திய கூட்டுறவு வங்கிச் செயலா் விஜயா.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தேவிகாபுரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த கல்வி விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவா் சரளா இளங்கோ தலைமை வகித்தாா்.

தேவிகாபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் விஜயா, சேத்துப்பட்டு வங்கி மேலாளா் உமா மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்று வங்கிக் கணக்கு தொடங்குதல் எப்படி, வங்கியில் வழங்கப்படும் கடன் உதவித் திட்டங்கள் மற்றும் சேமிப்பின் அவசியம் குறித்துப் பேசினா்.

கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கோவிந்தராஜ், மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா்கள் மணியம்மை, உமாமகேஸ்வரி மற்றும் தச்சம்பாடி கிராம பொதுமக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com