

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பெரியகுப்பம் திருமூலநாதா் சுவாமி, ஆரணியை அடுத்த ஒண்ணுபுரம் கச்சபேஷ்வரா், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை சமேத திருமூலநாதா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி,
புதன்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்பலங்காரம், யந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை புண்யாஹவாசனம், அங்குராா்ப்பணம், நாடிசந்தானம், யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா், காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.