கீழ்பென்னாத்தூா் அருகே பெயிண்டா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமம், குமரக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டா் சுரேஷ் (40). இவரது மனைவி செல்வி (34). இவா், புதன்கிழமை காலை கூலி வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டும், பூஜை அறையில் இருந்த மரப்பெட்டியும் உடைக்கப்பட்டு 20 பவுன் தங்க நகைகள், ரூ 1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸில் செல்வி புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.